இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!
தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் மாதம் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள கௌரவ அதிதியாக பிரதமர்…
மாவனல்லையில் 30 கடைகள் தீயில் நாசம்
மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள்…
6ஆம் வகுப்பில் பெயிலாகி, ஹலாலை பேணி உயரங்களை தொட்ட ஒருவரின் கதை
என்னுடைய இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்னை செதுக்கிய, உருவாக்கிய, கணித ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன். ஆனால் என் மகிழ்ச்சியை நான் ஆசிரியரிடம் சொல்வதற்கு முன்பே, அவர்கள் இவ்வுலகிற்கு விடை சொல்லியிருந்தார்கள் நான் மிகவும் சோகமடைந்தேன்.. நான் எப்போதும் எல்லா இடங்களிலும்…
சோமாலிய கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மீன்பிடி கப்பலில்…
படப்பிடிப்புக்காக வழங்கப்பட்ட ரயில் தடம்புரண்டது!
கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. சிறப்பு அனுமதியின் கீழ், படப்பிடிப்பிற்காக ஜனவரி 24 முதல்…
500 கோடி நிதி மோசடி – தம்பதியினருக்கு விளக்கமறியல்
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
ரயில்வே சரக்குக் கட்டணம் அதிகரிப்பு
ரயில்வே சரக்குக் கட்டணத்தை பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 1,888 வீடுகள்!
சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.மார்ச் மாத தொடக்கத்தில் இங்கு நிர்மாணப் பணிகள்…
27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி…
புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி…