LOCAL

  • Home
  • மருத்துவபீட மாணவன் முஹம்மட் ஐமன் வபாத்

மருத்துவபீட மாணவன் முஹம்மட் ஐமன் வபாத்

இலங்கை பேராதனை பல்கலைக்கழக இறுதியாண்டு மருத்துவ பீட மாணவன் முஹம்மட் ஐமன் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் முஹம்மட், ஓய்வுபெற்ற ஆசிரியை ஏ.ஆத்திக்கா ஆகியோர்களின் மகனும், ஓய்வுபெற்ற அதிபர்…

காலி கோட்டையில் பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு

போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதையுண்டு போன காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி பாரம்பரிய அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விடயங்களை “அட தெரண” ஆராய்ந்தது.…

இரகசியமான முறையில் விமானத்துக்குள் நுழைந்த நபருக்கு விளக்கமறியல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா இன்று…

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை…

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும்…

சுங்கத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு

138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல, கலபிடமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆட்சேர்ப்புக்கான…

தெமோதர எல்ல பகுதியில், மக்கள் வெள்ளம்

இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முதல் இன்று -01- வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நுவரெலியா செல்லும்…

இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை, மக்கள் அச்சப்பட தேவையில்லை

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…