ஒழுக்கமான சாரதிகளை உருவாக்க புதிய திட்டம்!
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரையில் நேற்று (02) பிற்பகல்…
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள்
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் பதில் பணிப்பாளராக தேதுனு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.பதில் பிரதிப் பணிப்பாளராக சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய சவுதி தூதரகம்
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்ற இராஜதந்திர அறக்கட்டளை பஜாரில் பங்கேற்றது. இதன் வருமானம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இவ்வாண்டு…
மலைத்தொடரில் சிக்கித் தவித்த 180 மாணவர்கள்
ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 60 மாணவர்களும் 120 மாணவிகளும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும்.…
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலைமைப்பரிசில்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
கட்டுமான பொருட்களின் விலைகளை குறைக்க கோரிக்கை!
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்களின் பிரதிநிதிகள் துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.அதற்கமைய, மௌபிம சுரக்ஷா ஒன்றியம், தேசிய நுகர்வோர் முன்னணி, ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணி, கறுவா…
சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை
உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலையகம் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உள்ளூர் சந்தையில் தேவைக்கேற்ப மரக்கறிகள் இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை…
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன.இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதுடன்,13588 மாணவர்கள் 9 A பெறுபேற்றையும்…
2 கால்களின்றி சாதித்த மாணவி
உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய பாடசாலையில் பயிலும் மாணவி பிறவிலேயே ஊனம் என்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதித்துள்ளார். ருவானி வாசனா பிறக்கும்போதே இரண்டு கால்களையுதம் இழந்து பிறந்தவராகும். அவர் இந்த ஆண்டு சாரதாரண தர பரீட்சையில் 07…
திறமையை வெளிப்படுத்திய விசேட தேவையுடைய மாணவர்கள்
முல்லைத்தீவில் இனிய வாழ்வு இல்லத்தில் தங்கி படிக்கும் மூன்று விசேட தேவையுடைய மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இவர்கள் வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற 3 மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் விழிப்புலன், செவிப்புலன் குன்றிய மாணவர்கள் என்பது…