காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரின் சடலம் மீட்பு
காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரின் சடலம் வென்னப்புவ, உடசிறிகம பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் கழிவு நீரை அகற்ற பயன்படுத்தப்படும் குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக வென்னப்புவ தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர் 22 வயதான ஸ்ரீஜீத் ஜெயஷான் என அடையாளம்…
பெற்ற மகளின் வாழ்வை சீரழித்த தந்தை
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாந்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய ஹதரவன கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைவிட்டு சென்ற…
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை…
பேருந்திலிருந்து விழுந்த மாணவன் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து நேற்று (03) மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவு…
சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையென போராட்டம்
வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன் சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும்,…
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
லுனுவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்பட்ட மூவர் கைது
இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
சைப்ரஸ் வாழ் இலங்கையர்களுக்கு…
சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் அமலுக்கு வரும் வகையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம் ஒன்றை நிறுவ வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, சைப்ரஸ் அரசாங்கம் தூதரகத்தைத் திறப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது,…
வீதியில் கண்டெடுத்த மணி பேர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு
தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி…
உலக பாரம்பரியத்திலிருந்து அகற்றப்படும் அபாயம்
உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக…