அந்தரங்க உறுப்பை ஐயன் பண்ணிய கணவன் கைது
மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது…
மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு…
மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் ஓய்வு
கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் குழு ஓய்வெடுக்கும் காட்சியைக் காண முடிந்தது. வருடாந்திர “சிறி தலதா வந்தனாவ” விழாவிற்காக கண்டி நகரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
குப்பை காடான கண்டி…
வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள்…
“மாணவர்களுக்கு போசாக்கான உணவு திட்டம் “
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.…
மணல் தீடைகளுக்கு சுற்றுலா படகு சேவை
இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில்…
தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை
தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. மோட்டார்…
தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றையதினம் வியாழக்கிழமை (24) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்களிப்பு, 24,25,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள்…
74 வயது மூதாட்டி மீது பாலியல் தொல்லை – மக்கள் ஆர்ப்பாட்டம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் ”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலை…
மூளையில் கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு
மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்…
