மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை
நாடு முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளர்களின் உயிர்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. சுகாதார…
இளைஞன் மர்மமாக உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், வியாழக்கிழமை (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு…
அதிகளவான மருந்துகளை வைத்திருந்த பெண் கைது
நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்ததற்காக 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன் ஓட்டி வந்த பெண் சோதனை செய்யப்பட்டார்.…
மாலினியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு…
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு (NFC) இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாலினி பொன்சேகாவின் இறுதி கிரியை நாளை திங்கட்கிழமை (26) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளமை…
சட்டத்தரணிகளின் உணவில் புழுக்கள்
மட்டக்களப்பு, நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவுக்காக பிரபல உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதனைகள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்தனர் இதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த,…
யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கைதிகளைப் பராமரிப்பதற்காக 20 பில்லியன் செலவு
நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் (700 கோடி ரூபாய்) கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக செலவிடப்படும்…
ஹமீத் அல் ஹுசைனி மாணவனுக்கு தாய்லாந்து கிக் பாக்ஸிங் போட்டியில் மகுடம்!
2025 தாய்லாந்து சர்வதேச தாய் தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியில் (Thailand International Thai Martial Arts Games 2025), 63.5 கிலோ கிக் பாக்ஸிங் பிரிவில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 10ஆம் வகுப்பு மாணவர் மாஸ்டர் எம்.ஐ.எம். இமான்…
உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்
72 ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி…
இன்று சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்கள்
3,147 தாதியர்கள் அரச சேவையில் இன்று(24) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை…
