LOCAL

  • Home
  • லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக 4 பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய…

60 ஆயிரம் இலஞ்சம் பெற்ற வருமான வரி பரிசோதகர்கள் கைது!

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல்…

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் ஜகத் குமார!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பாராளுமன்றில் விசேட அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி தீர்மானித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்…

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்…

158 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ்!

இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.…

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது…

அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது!

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள்,…

விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.