உள்ளூராட்சி தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களை கோர கட்சித் தலைவர்கள் இணக்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை…
யாழ். ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்…
லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்
சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கு லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (30.11.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன்…
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்
ஒரு குழந்தை என்பது பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.அதிலும், இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது பெற்றோரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், மும்மடங்காக்குவதும் ஆகும்.அதன்படி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து “அத தெரண”வுக்கு பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது.அனுராதபுரத்தைச் சேர்ந்த…
நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் முஅல்லா மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் அவர்களின் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு சம்மாந்துறை முஅல்லா மஹல்லாவில் பெரும்…
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை…
சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மழையினால்…
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் 🔸 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில் 🔸 இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம்…
UAE யில் உள்ள இலங்கையர்கள் குறித்து, பிரதமரிடம் கூறப்பட்டவைகள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார்.…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடமைப்புத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை…
