இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்.
இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில, உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவர் இராணுவ மேல்மாகாண கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுளளார். சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் திணைக்களமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..
இன்னும் இரண்டு வாரங்களில் அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால் சிக்கல்
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்…
கணவன் மனைவி படுகொலை – சந்தேகநபர் கைது!
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட…
இ-பாஸ்போர்ட் சம்பவம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக்…
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் விசனம்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நாசமடைந்த தமது நெற்செய்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நட்டஈடு போதாது என பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வடக்கு மற்றும்…
உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்
ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை…
கல்வியமைச்சுக்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து பிரதமர்.
கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் ஈடுபடுத்தப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முழு அரச சேவையிலும் எந்த திட்டமும் இன்றி அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து குழுக்களின்…
கார் மீது மோதிய ரயில் – சிலர் படுகாயம், காலியில் சம்பவம்!!
காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும்…
வீட்டினுள் பெறுமதியான புதையல் இருப்பதாக வர்த்தகர் ஒருவரை நம்ப வைத்து 2.9 மில்லியன் ரூபா பணத்தை கூலியாக பெற்றுச் சென்ற போலி ஜோதிடர்!!
ஜோதிடர் ஒருவர், வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல், அவரது வீட்டுத் தோட்டத்தில் போலி இரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் இருப்பதாக உரிமையாளரை நம்பவைத்து, புதையலை எடுக்கும் சடங்குகளை மேற்கொண்டு, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை எடுத்துச்…
