வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை
வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இன்று இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று…
நாடு முழுவதும் வெசாக் விழிப்புணர்வு
வெசாக் பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. வெசாக்கின் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடபிரிகர, மதப் பிரசாதங்கள், தூபக் குச்சிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மின்சார பல்புகள் போன்ற விற்பனையாளர்கள்…
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு…
யாழில் நடிகர் பாஸ்கர்
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் , யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வரும் “கர்மா” எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம்…
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி
கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை…
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம்…
‘மின்சார சபைத் தலைவர் இராஜினாமா செய்யவில்லை’
இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை வலு அமைச்சின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு செல்லத் திட்டமிட்டுள்ளமை காரணமாக தனது விடுப்பு தொடர்பாக அறிவிக்கும் கடிதத்தை ஜனாதிபதியிடம் சியம்பலாபிட்டிய…
செப்புக் கம்பி , கேபில்களுடன் இருவர் கைது
மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமை(10) மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும்…
வெசாக் தினத்தில் சிறப்பு பாதுகாப்பு
வெசாக் வாரத்திற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் பிரெட்ரிக் வூட்லர் (Fredrick Wootler) தெரிவித்துள்ளார். அத்துடன், வெசாக் மண்டலங்களுக்குள் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு…
விமானத்தில் திருடிய சீனப்பிரஜை கைது
12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 4ஆயிரம் அமெரிக்க டொலர்களை திருடினார் என்றக் குற்றச்சாட்டில் 54 வயதான சீனப்பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த சீனப்பிரஜையே கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால், ஞாயிற்றுக்கிழமை…
