ஜனாதிபதி அம்பேவெல பால் பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர…
சதொச ஊடாக பெரிய வெங்காய இறக்குமதி!
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காய ஏற்றுமதியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளது.வெங்காயத்தின்…
மோட்டார் சைக்களில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக…
நாளொன்றுக்கு 2000/- சம்பளம் வேண்டும்!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல இசுருபாயவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்…
நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்
நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் தீர்மானத்தின் படி, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்…
பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!
நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.…
பிணை வேண்டாம் என கூறிய ஒட்டாவா கொலையாளி!
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…
உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர்,…
சு.க நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அதன் உறுப்பினர்களால் நேற்று (18) கலந்துரையாடப்பட்டதாக…
மரணத் தண்டனை கைதி 35 வருடங்களின் பின்னர் கைது!
நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுத் துண்டாக…
