அலையில் அடித்துச் செல்லப்பட்ட நபர்களை காப்பாற்றிய பொலிஸார்
உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (28) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும்…
மீன்பிடி படகு விபத்து
தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நெடுநாள் படகொன்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர். இரண்டு…
நுவரெலியாவில் கார் விபத்து
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார். மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார்.…
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில்…
விபத்துக்குள்ளான இரண்டு மீன்பிடி படகுகள்
கடலில் விபத்துக்குள்ளான இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து மீனவர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்துமாறு விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடி படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி…
கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பலி
மீன்பிடிக்க முயன்ற 10 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். யாழ். அச்சுவேலி – தோப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் தக்ஷன் (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
ஒருகொடவத்தை பகுதியில் பயங்கர விபத்து
இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில்…
ஹெலிகொப்டர் விபத்து; நீதிமன்றம் உத்தரவு
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் ஒன்று மதுருஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, விபத்துக்கான காரணத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு, தெஹியத்தகண்டிய பதில் நீதவான், பொலிஸாருக்கும் விமானப்படைக்கும் உத்தரவிட்டுள்ளார். விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையொன்றை…
தீப்பற்றி எரிந்த டிப்பர்
தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று திங்கட்கிழமை (23) மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்…