கிரிஷ் கட்டிட தீ விபத்துக்கான காரணம் (UPDATE)
கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ‘கிரிஷ்’ கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற…
கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின்…
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.…
தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. (05) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா மகா வித்தியாலயத்தை…
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவர் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர்…
பேருந்து – லொறி விபத்தில் பெண் காயம்
நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை 11 மணியளவில் நுவரெலியா – ஹட்டன் பிரதான…
சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடிப்பு
கம்பளையில் அமைந்துள்ள சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடித்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன – தீப்பிடித்தலை அடுத்து அங்கிருந்த பொருட்கள் வெளியேற்றப்படுவதை காணலாம் – சேத விபரங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் இல்லை.
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக பெற்றோலியப் பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுசருடன் துவிச்சக்கர வண்டி…
மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் ஓட்டுநர் உயிரிழப்பு
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (01) 8.10 மணியளவில்…
தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த…