வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள்
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு…
அதிகார சபை விசேட சோதனை
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களை கண்டறிந்துள்ளனர்.…
தகராறை தீர்க்க STF வரவழைப்பு
ஹொரணை நகரில் பல நாட்களாக பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவர்கள் இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்றுவந்த தகராறை கட்டுப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹொரணை பஸ் நிலையத்திற்கு இன்று (23) திடீரென வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களிடையே…
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது (UPDATE)
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
8 வயது சிறுவனின் உயிர் காக்க உதவிடுங்கள்!
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனுக்கு உடனடி உதவி அவசியம்! 8 வயது சிறுவன் உயிர் பாதுகாக்க மருதண்டு மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) அவசியமாகிறது. இந்த சிகிச்சையின் மொத்த செலவாக 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.…
பணி நேரத்தில் குடிபோதையில் தூங்கிய அதிகாரிகள்
பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் குடிபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது. இந்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
வைத்திய நிபுணர் விளக்கமறியலில்
தனது மருத்துவ நிலை குறித்து தவறான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் விசேட மயக்க மருந்து நிபுணரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின்…
கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான அறிவிப்பு
வௌிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முறைமையில் ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என்றும், குறித்த திகதியில் ஒருநாள் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அமைச்சர்,…
உணவுக்கான புதிய விலைகள் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை 2,000 ரூபாவாக அதிகரித்த பாராளுமன்ற சபைக் குழு இன்று (23) முடிவு செய்துள்ளது. புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அதன்படி, பாராளுமன்ற…
ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்!
வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீர்வையற்ற வாகன அணுகலுக்கு அரச ஊழியர்கள் உட்பட 20,000 பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அந்த வாய்ப்பு…
