Editor 2

  • Home
  • பேரீச்சம்பழத்தின் மீதான வரி குறைப்பு

பேரீச்சம்பழத்தின் மீதான வரி குறைப்பு

பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள்

வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஒரு தேசிய…

வாகனங்கள் சில மீட்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் சில கொழும்பு 7 சாவஸ்தி மாளிகைக்குச் சொந்தமான காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் சிலர் அந்த கட்டடத் தொகுதியைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இந்த வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. றித்த கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

வடகிழக்கில் – சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டிப்போம்

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துக்கொள்ளாது, இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுவதால் இம்முறை இலங்கையின் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக வடகிழக்கு…

அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு…

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பொல்பிதிகம, பத்தேகம மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவுகளில் நேற்று (27) இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்டெங்வெவ – ஹிரிபிட்டிய வீதியில்…

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில்…

20 கோடி ரூபாய்க்கும் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து…

வேலைகளுக்காக இஸ்ரேல் செல்லும் செவிலியர்கள்

2025 ஆம் ஆண்டின் கடந்த சில நாட்களில், 119 இலங்கையர்கள் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இதற்கிடையில், ஜனவரி 29 ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ள 152வது குழுவைச் சேர்ந்த 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு…

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580…