போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை அத தெரண தொடர்பு கொண்டு வினவிய போது, ரமல் சிறிவர்தனவின் ராஜினாமா கடிதம்…
போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
குடிவரவு கட்டுப்பாட்டாளரின் பிணை மனு ஒத்திவைப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரீதி பத்மன்…
தன்னம்பிக்கையோடு போராடுவோம்….
ஒருவன் தன்னுடைய தொழிலில்படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச்…
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலைகள்
நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச விலை வெள்ளை முட்டை ஒன்றுக்கு ரூ. 28-35 க்கு இடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகபட்ச விலை 400 கிராம் பால் மா…
பங்குச் சந்தையுடன் இணைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்
வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று(28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை
கல்வியாண்டு 2024 (2025) கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சை மார்ச் 17, 2025 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது:
யாழ் விஜயம் சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் பேச்சாளர் கி.டனிசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடுமென சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில்…
குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் பலி
பதுளை புஸ்ஸலா – வாடித்துறை பகுதியில் நேற்றைய தினம் குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் குளவி கொட்டுக்கு இலக்கான மேலும் 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் வகுஹப்பிட்டிய…
