மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை
பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச் சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (16) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருந்து இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு…
கொழும்பிலிருந்து யாழ். செல்லும் விசேட குழு
யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்காக கொழும்பில் இருந்து விசேட ஆய்வு குழு யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாகவும் அவர்…
14 போலிப் பட்டதாரிகள்
வடமத்திய மாகாண (North Central Province) ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்த 14 போலிப் பட்டதாரிகள் தற்போதைக்கு கண்டறியப்பட்டு, சேவையில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் கடந்த காலங்களில் போலி பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, வடமத்திய மாகாண ஆசிரியர் சேவையில் நியமனம்…
ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை
2015 ஆம் ஆண்டு 35 சத்திரசிகிச்சை அறை விளக்குகளை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் சேவை பிரிவில் கடமையாற்றிய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று…
வர்த்தகர்களுக்கு 07 இலட்சம் ரூபா அபராதம்
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு ஏழு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்ததாகவும், குற்றத்தை…
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தம்
மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்…
9000 கிலோ அமோக்ஸிசிலின் மூலப்பொருட்களின் தரம் தோல்வியடைந்துள்ளது
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் குழு அலட்சியம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட 9000 கிலோ அமோக்ஸிசிலின் மூலப்பொருட்களின் தரம் தோல்வியடைந்துள்ளதாகவும் அதற்கு செலுத்திய 104,844,337 ரூபாய்…
வாகனத்துடன் மோதிய யானை படுகாயம்
செட்டிகுளம் – மன்னார் வீதியில் கூலர் வாகனத்துடன் மோதுண்ட யானை ஒன்று படுகாயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடக்கின்றது. இன்று (17) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள பெரியகட்டுப் பகுதியில்…
கொலை செய்யப்பட்ட ரஷியா தலைவர்
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர். ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…