விமான நிலையத்தில் குஷ் என்ற போதைப்பொரும் கைப்பற்றப்பட்டது
குஷ் என்ற போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (23) பிற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மகனை தாக்கிய தந்தை
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய நடவடிக்கை
பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அங்குருவத்தோட்ட, ஹல்தோட்டை, பீதிகமுவ பகுதியைச் சேர்ந்த, ஹொரணை பிரதான பாடசாலையில்…
ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில்…
14ஆம் திகதி மீகொடை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது
கடந்த 14ஆம் திகதி மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதன்படி கடந்த 19ஆம் திகதி…
வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு
ஜாஎல சாந்த ஹானா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த…
புதையல் தேடி அகழ்வில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது
புதையல் பொருட்களை தேடி அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராந்துருகோட்டை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மாலை கிராந்துருகோட்டை ஹங்கலஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டை பிரதேசத்தை…
அரிசி நெருக்கடிக்கு தீர்வு
தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இது தொடர்பான முன்மொழிவை…
சிறப்பு போக்குவரத்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மேலதிகமாக பல பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (24) முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலம் முடியும்…
