50,000 இற்கு மேற்பட்ட மின்துண்டிப்பு முறைப்பாடுகள்
24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கொட்டி தீர்க்க போகும் கனமழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம்…
சீரற்ற காலநிலையால் ரயில் சேவையில் தாமதம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிரதான ரயில் பாதையிலும் களனிவெளி பாதையிலும் பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதேவேளை கொழும்பு…
விமானநிலையத்தில் அதிரடியாக கைதான பெண்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை – தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
நானுஓயாவில் மண்சரிவு
நுவரெலியா நானுஓயா – சமர்செட், லேங்டல் தோட்டத்தில் இன்று (30) தொடர் லயின் குடியிருப்பின் பின்புறத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக நானுஓயா கார்லபேக் தமிழ்…
கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பல இடங்களில் வெட்டுக்காயங்கள் சம்பவத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்…
ஜூன் 02 முதல் கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேர கடவுச் சீட்டு விநியோக சேவை 2025, மே மாதம் 30 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என்றும், அதன்படி, 2025 ஜூன்…
தேசிய சுற்றுச் சூழல் தின கொண்டாட்டம்
ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்த இந்த ஆண்டு தேசிய கொண்டாட்டம், கேகாலை நிதஹஸ் மாவத்தையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று…
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா – புகாரி சந்தியில் வைத்து, நபர் ஒருவரிடம், பத்தாயிரம் ரூபா இலஞ்சம்பெற…
விபத்துக்குள்ளான மீனவர்கள் மீட்பு
பலப்பிட்டிய கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்களும் விமானப்படையினரால் மீட்கப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
