Editor 2

  • Home
  • சிறை கைதிகளுக்கு விசேட சலுகை

சிறை கைதிகளுக்கு விசேட சலுகை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின்போது கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் திறந்தவெளியில் கைதிகளை பார்வையிட அனுமதிக்கப்படுமென…

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 600-700 , ஒரு கிலோ கரட் 400 ,…

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெடிகுண்டுகள் நேற்று (11) கைப்பற்றப்பட்டன. கீரிமலை நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து,…

அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பெண்களில் மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார்…

வரலாறு காணாத அளவு தங்கம் விலை உயர்வு

உலகில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளமையால் நகைப்பிரியர்களும், தங்க முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது. மீண்டும் இந்த வரிகளை டிரம்ப்…

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி…

பாலத்திலிருந்து குதித்த பெண்னை காப்பாற்ற பொலீசாரின் சாகசம்

கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து குதித்த பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார், பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் (103984) ஹேரத்திற்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடனடியாக செயல்பட்ட அதிகாரி,…

டிப்பர் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சென்ற வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச் சேர்ந்த 39…

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். குடும்ப தகராறு கொலைக்குப் பிறகு, இறந்தவரின்…

சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம் பெண்கள் கைது

சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம் பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை…