Editor 2

  • Home
  • அதிவேக வீதியில் வாகன நெரிசல்

அதிவேக வீதியில் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து…

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் மறைத்து குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க மேலதிக இயக்குநரும் ஊடகத் தொடர்பாளருமான சிவலி அருகோட தெரிவித்தார். சந்தேக நபர்கள் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்…

தடுத்து வைத்திருந்த சிறுவன் மாடியில் இருந்து பாய்ந்ததில் காயம்

இரண்டு மாடி வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன், அறையில் இருந்த ஜன்னலைத் திறந்து வெளியே குதித்ததால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 59 வயது நபர் கைது…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை ஒரு மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக்…

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி சிறுமி பலி

எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதிய விபத்தில் 06 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றின் மீது நேருக்கு…

அதிகமாக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல்

இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த உயர்…

சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்…

ஜனாதிபதியின் தமிழ், சிங்கள புத்தாண்டுச் செய்தி

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம். வீழ்ச்சியடைந்திருந்த நமது…