விபத்துக்குள்ளான நடிகர் அஜித்தின் கார்
துபாயில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.
சமூக மாற்றத்திற்காக மக்களின் மனப்பான்மை மாற வேண்டும்; பிரதமர்
சமூக மாற்றத்திற்காக மக்களின் மனப்பான்மை மாற வேண்டும் எனவும், இது 24 மணித்தியாலங்களில் செய்யக்கூடிய செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் ஊடகத்துறைகளில் புதிய பரிணாமத்தை உருவாக்கும் சவாலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து…
Clean Sri Lanka தொடர்பில் விளக்கமளிக்கும் – பிரதமர்
Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில்…
97 மில்லியன் பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது
97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 66 வயதான பொஸ்னியா பிரஜை ஒருவர் இன்று (08) காலை விமான நிலையத்தின் வருகை…
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாகொலவெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
வினாத்தாள் கசிந்ததில் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்…
பஸ் உரிமையாளர்களின் தீர்மானம்
பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல்…
JICAஇன் உப தலைவரை சந்தித்த பிரதமர்
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கென JICA நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்பு,…
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கரோலினா தோட்டத்தில் நேற்று (8) சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 29 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட வட்டவளை மற்றும் கலஹா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.…
குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 97 பேர் கைது
குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்கவின் பணிப்புரையின்…
