அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள பிரதேசம்
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அங்கு 148.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுகங்கையின்…
தனமல்வில மாணவி விவகாரம் – சட்ட வைத்தியர் கைது
தனமல்வில மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், மாணவியை குற்றவியல் வற்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், கைது…
பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து,…
மனித பாவனைக்குத் தகுதியற்ற ஆயிரம் கிலோ பருப்பு கண்டுபிடிப்பு!
புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து மனித பாவனைக்குத் தகுதியற்ற 1,000 கிலோ கிராம் பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல உணவு இறக்குமதி…
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திக்வெல்லவிற்கு தடை!
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி,…
இலங்கை இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்!
இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் இன்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.வந்தடைந்த படகையும்…
தாய்லாந்தின் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!
தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவர்.இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த 24…
அலி சாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார்.அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர் இன்று (16) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில்…
STARLINK சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வௌியீடு!
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின்…
