லாப்ஸ் கேஸ் விலையில் மாற்றமில்லை…
ஆகஸ்ட் மாதத்திற்கான லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – மூவர் கைது!
கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி, டுபாய் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (31) கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்புப் பணியகத்தின்…
மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை
ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றொரு விசேட அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர் இணையதளத்தில் பதிவு செய்து அந்த தகவல்களின்படி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.…
சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை தொடர்பில் வௌியான தகவல்
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபா ஒக்டேன் 95 ரக…
சஜித்திற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார். இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு
ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1916 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான…
கொழும்பில் வாகன தரிப்பிடம் குறித்து புதிய தீர்மானம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்படுவார் என அதன் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். “கொழும்பின் மாநகர…
