நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்.
நாடு முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகிறது. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்…
இந்தியா நிதியுதவியுடன் சம்பூரில் காற்றாலை மின் நிலையம்
இந்திய நிதியுதவியுடன் சம்பூரில் 120 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் இந்திய மத்திய மின்சார அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இருக்கும்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டிசம்பர்…
தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி இடைநிறுத்தம்!
சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன. இருப்பினும், ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக நேரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை முறைமையை அதே வழியில் செயல்படுத்த தீர்மானித்துள்ளன.
மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
மாளிகாகந்த பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவர்…
சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள்..
சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை…
சபாநாயகர் பதவி விலகியதை பாராட்டுகிறேன் ; நாமல்
சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும்,…
டிசம்பர் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 41,191ஐ எட்டியது!!
டிசம்பர் முதல் வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 41,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சுற்றுலாத் துறை தொடர்ந்து செழித்து வருகிறது. இது உச்ச விடுமுறை காலத்திற்கான வலுவான தொடக்கத்தைக் குறிக்கிறது, இது இலங்கையின் மீதான உலகளாவிய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
அடுத்த சபாநாயகர், ரிஸ்வி சாலியா??
சபாநாயகர் அசோக ரன்வெல தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதி சபாநாயகராக ரிஸ்வி சாலி பணியாற்றுகிறார். இந்நிலையில் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கு ரிஸ்வி சாலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள்…
CCD யின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!!
கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி. கே. பரனலியனகே நேற்று (13) உத்தரவிட்டார். 14 கோடி ரூபா…
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.