தோல் நோய்கள் அதிகரிப்பு!
இத்தினங்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.அத தெரண ‘பிக் ஃபோகஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைத்தியர், இந்த நிலைமை சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக…
ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு அவசர அறிவித்தல்!
பாதகமான வானிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.பணியிடத்தில் உடல் ரீதியாக…
குத்தகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
குத்தகை நிறுவனங்களால் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,குத்தகை நிறுவனங்கள் ஊழியர்களை பயன்படுத்தி பலவந்தமாக வாகனங்களை எடுத்துச்…
ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தனது…
155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!
புத்தளம், – பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ரிதிபென்திஎல்ல , 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ்…
சொகுசு வாகனங்கள் போலியாக பதிவு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது.இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய…
கொள்ளையிட வந்தவர் உயிரிழப்பு
மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர், வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய கொள்ளைக் குழுவொன்று குறித்த வீட்டிற்குள் கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது கொள்ளையர்களில் ஒருவரை வீட்டில்…
இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு
பிராந்திய ரீதியாக இலங்கையில் இருதய நோய் பதிவாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய…
