Month: October 2024

  • Home
  • ஜனாதிபதி, பிரதமரை நோக்கிச் செல்லும் தபாலட்டைகள்!

ஜனாதிபதி, பிரதமரை நோக்கிச் செல்லும் தபாலட்டைகள்!

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக மக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட…

டொலரின் விற்பனை பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகும்.…

டெங்கு ஒழிப்புக்கு கியூபா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட…

13 வயதில் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று களுபோவில பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி பகுதியில் வசிக்கும் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களில் பெண் பிள்ளையான டபிள்யூ.பி.பி.…

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலான அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. இது…

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர்…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால்,…

ஜனாதிபதியை சந்தித்த ரஷ்யத் தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு தூதுவர் எஸ். ஜகார்யன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,…

சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும்

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது. “பிள்ளைகளைப் பாதுகாப்போம்; சமமாக மதிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு…

சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதே குறிக்கோளாகும்!

உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள்,…