சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதி!
வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெலிப்பன்ன…
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா…
முட்டை தொழிலை காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள முடிவு
தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
வௌிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வௌிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. 2024…
பந்துலவின் தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார். இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என…
ஜனாதிபதி – IMF இடையே 2ஆவது நாளாகவும் கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக்…
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.…
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
நுவரெலியாவில் அண்மைக்காலமாக நிலவிய மரக்கறிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் இன்று (04) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதால், விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் அதிகளவில் மரக்கறி…
தொலைபேசிக்கு அடிமையான மாணவனின் தவறான முடிவு
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் மாணவன் ஒருவர் , தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி…
முகக்கவசத்தை அணிவிக்குமாறு அறிவுறுத்தல்
இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரத் பிரிவு, பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் நல மருத்துவர்தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். கை, கால் மற்றும் வாய் நோய்…