Month: October 2024

  • Home
  • ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின்…

உலக வங்கியிடமிருந்து மேலும் ஒரு நிதி உதவி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு…

தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் 01 ஒக்டோபர் 2024 முதல் 31 மார்ச் 2026 வரையிலான…

தொலைத்தொடர்பு கோபுரங்களில் கைவரிசை காட்டியவர் சிக்கினார்

மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட…

அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தம்.

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக ரீதியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என அவர்…

புதிய கூட்டணியின் தலைவர் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும், பொதுத் தேர்தலில்…

பழங்கால பொருட்களை பெற முயன்ற மூவர் கைது

தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான வீலஉட பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நவ குறுந்துவத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக…

கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி…

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார். அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம்…