முதல் 8 மாதங்களில் வரி வருவாய் 28.5% அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி முதல் ஓகஸ்ட்…
வாக்களிப்பு நாளில் இவற்றுக்கு தடை!
இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர் அல்லது வேட்பாளர் தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர்…
நுவரெலியா மாவட்ட வாக்காளர்கள் தொடர்பான விபரம்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 532 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட…
மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடி வரும் பொலிஸார்
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாத பெண் ஒருவருடன் வாடகைக்காக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பாரிய அளவிலான…
77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் ஒரு கோடியே 32 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நாளையும் நாளை…
எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல்…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடல் – சகல மாணவர்களையும் உடனயாக வெளியேற உத்தரவு
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
சஜித்திடம் சென்றமைக்கான காரணத்தை கூறிய கீதா!
மூழ்கும் படகில் ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலி குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமை குறித்து இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்…
தங்கப் பதக்கங்களை அள்ளிய இலங்கை வீரர்கள்
20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் அவர் முடித்துள்ளார். இப்போட்டியில் பந்தயத்தை 2…
21,000/- ஆக அதிகரித்த அடிப்படை சம்பளம்!
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது…