LOCAL

  • Home
  • மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையே (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

இலங்கை அணியில் நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்

பஹ்ரேய்னில் நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இலங்கையணியின் இறுதி தேர்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஃப்.எம். நியாஃப் ஸைனி, ஆர்.எம். மில்ஹான் மஹி, எஸ்.எம். சம்ரி ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வீரர்களுக்கு பிரதான…

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் (UPDATE)

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலத்தை இந்த மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 39,707 மேன்முறையீடுகளும் 3,183 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

தொடரும் சோதனை நடவடிக்கை (UPDATE)

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் முப்படைகள் இணைந்து நேற்றும் (21) பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர்…

கொல்லப்பட்ட நிலையில் யானைகளின் உடல்கள்

தம்புள்ளை, இனாமலுவ காப்புக் காட்டில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கொம்பன் யானை மற்றும் ஐந்து யானைகளின் உடல்கள் சிதறி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொம்பன் மற்றும் இரண்டு யானைகளின் உடல்கள் இருக்கும் இடங்களை அப்பகுதியைச்…

இலங்கையர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக்…

மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய்…

திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என்று தற்போது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகியிருப்பினும், தற்போது மீண்டும் கவனம் பெற்று…

பேனா கோடுகளால் 14 மாணவர்கள் வைத்தியாசாலையில்

பியகம ஆரம்ப பாடசாலையில் நான்காம் (4-B) வகுப்பில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட அரிப்பு காரணமாக திங்கட்கிழமை (21) மதியம் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாணவர்கள் மற்றும் ஆறு மாணவிகள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலை…

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன்

அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க. அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்துள்ளார். ஜனாதிபதியின் பரிந்துரை குறித்து இறுதி முடிவை எடுக்க அரசியலமைப்பு சபை புதன்கிழமை (23) கூட உள்ளது. பிரதம நீதியரசர்…