இளைஞன் ஒருவரை கடத்தி தாக்குதல்
யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர். யாழ்ப்பாணம், மானிப்பாய்…
இலங்கை வருகின்றார் ஷாருக்கான்
பிரபல பாலிவூட் நடிகர் ஷாருக்கான் இலங்கை வருவது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் இவர் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள City of Dreams SriLanka,…
நாட்டு மக்களுக்கு; அவசர எச்சரிக்கை
தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற…
போலி டொலர்களுடன் ஒருவர் கைது
ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது 06 போலி…
இந்திய நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல்…
மது போதையில் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர்
கசிப்பு அருந்தி விட்டு அதிக மது போதையில் படுத்திருந்தவர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மானிப்பாய் தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான கணேசராசா சுவாகரன் (வயது 42) என்பவராவார். கடந்த 29 ஆம் திகதி…
ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி
அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்…
பேருந்து கட்டணம் 0.55% ஆல் குறைப்பு
எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 0.55% ஆல் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு…
ஓட்டோ கட்டணங்கள் குறித்து அறிவிப்பு
பெட்ரோலின் விலை ரூ.12 அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. லலித் தர்மசேகர தெரிவித்தார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது. இந்தப் புலமைப்பரிசில்கள் 2019.01.01 முதல் 2024.09.15 வரை வெளிநாட்டில் பணிபுரிவதற்காக பணியகத்தில் பதிவுசெய்த பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. 2024 ஆம்…