LOCAL

  • Home
  • தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இன்று தேங்காய் விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தேங்காயின் விலை அதிகரிப்பு…

திடீர் சுகயீனத்தினால் இதுவரையில் 7 பேர் பலி

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாகாண…

புலமைப்பரிசில் மீண்டும் நடத்துமாறு மனு

செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும்…

4-5 மணிநேர அவசர மின்வெட்டு

இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார…

சந்தையில் அரிசி வினியாகம் ஆரம்பம்

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து…

அம்மடுவ பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுவன் பலி

கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவ தினத்தன்று சிறுவன், தந்தை…

விவசாயிகளுக்கு 1 லட்சம் ருபாய் இழப்பீடு

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விவசாய…

கோர விபத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற…

இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையில் 100 வருட உறவை முன்னிட்டு சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வு

ஈராக் குடியரசு தூதரகம் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஈராக்கிய தூதரகத்தினால் 10 கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

போக்குவரத்து அமைச்சின் வரவு செலவு குறித்து கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பின் கீழ் வரவு செலவு திட்ட பரிந்துரைகள்…