தட்டுப்பாடின்றி உப்பு விநியோகம்
அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் 30,000 மெட்ரிக் தொன் உப்பு இன்று வியாழக்கிழமை (22) நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது…
13 வயது சிறுமி துஷ்பிரயோகம்
13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குவே, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில்…
டலஸ் அழகப்பெரும – ஜூலி சங் சந்திப்பு
சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கும் புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் ஒரு சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், அமெரிக்காவின் புதிய நிர்வாகம், பொருளாதார ஒத்துழைப்பு…
புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை?
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் எரிபொருள் அட்டை…
“மே 27க்கு முன்னர் சமர்ப்பிக்கவும்“
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்கள் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும்…
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்டது. அது ஓடும் ரயிலில் இருந்து…
மருத்துவத் துறையை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு வைத்தியசாலை
மட்டக்களப்பில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில நாட்களாக முன்பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக…
கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் எம்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல். அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு…
இலஞ்சம் பெற்ற OIC கைது
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச…
பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக இலங்கை…
