22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது.யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று இரவு (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது…
இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி வெற்றி
33 வருடங்களின் பின்னர் கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி இன்று (09) வெற்றி பெற்றுள்ளது.கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி ஹெவலொக் அணியை 19 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.
அறுவர் படுகொலை – வௌிவரும் உண்மைகள்!
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கையர்கள் 6 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர்…
40% பெண்கள் செனிட்டரி நெப்கின் பயன்படுத்துவது இல்லை!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40% பெண்கள் நிறுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்கமைய செனிட்டரி நெப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதே இதற்கான முக்கிய காரணம் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கொவிட் தொற்றினால்…
கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!
கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலலையில் சிக்குண்டு கடலில் மூழ்கியுள்ளார்.அப்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் குறித்த பெண் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சார்ஜன்ட் மஞ்சுள…
இராஜினாமா செய்த பணிப்பாளர் சபை!
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக இலாபம் ஈட்டும் பால்மா நிறுவனங்கள்! வௌியான உண்மைத் தகவல்!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக் குழுவில் தெரியவந்துள்ளது.குறித்த குழுவின்…
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்…
தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது!
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) மாலை லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.கெப்…
புதிய கல்விச் சீர்திருத்தம் : இராஜாங்க அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்…
