Editor 2

  • Home
  • கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி

கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில், உயிர்காக்கும்…

இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து

இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்…

குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்

இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய…

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

கண்டி – வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று மாலை 11 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய…

EPF சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர…

புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பதாரிகளுக்கு

ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டுக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படமாட்டாது. செல்லுபடிகாலம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

விமான சேவை குறித்து ஜனாதிபதியின் நடவடிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (20)சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும்…

தம்பியை வாளால் வெட்டிய அண்ணன்

பதுளை நகர மையத்தில் , அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டியதில் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் குறித்த நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்ற போது அனைவருக்கும் அச்சுறுத்தல்…

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும், சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை…

அதிவேக நெடுஞ்சாலையில் கடன் அட்டை பயன்பாடு

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.