மூச்சுக்குழாய் அழற்சி ஆபத்தான நோயா?
மூச்சுக்குழாய் அழற்சி என்பது மூச்சுக்குழாய்களின் வீக்கத்தைக் குறிக்கிறது. மூச்சுக்குழாய் என்பது நுரையீரலுக்குள் காற்றைக் கொண்டு செல்லும் குழாய்கள் ஆகும். இது கடுமையானதாகவோ அல்லது நாள்பட்டதாகவோ இருக்கலாம். மூச்சுக்குழாய் அழற்சி மூச்சுக்குழாய் அழற்சி என்பது சுவாசக் குழாய்களின் வீக்கம் ஆகும். இவை மூச்சுக்குழாய்…
நிட்டம்புவையில் தீ விபத்து
நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
86 குண்டுகள், போதைப்பொருட்கள் மீட்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து, வவுனியாவில் 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5,600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது…
இலங்கை அணியில் நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்
பஹ்ரேய்னில் நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இலங்கையணியின் இறுதி தேர்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஃப்.எம். நியாஃப் ஸைனி, ஆர்.எம். மில்ஹான் மஹி, எஸ்.எம். சம்ரி ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வீரர்களுக்கு பிரதான…
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் (UPDATE)
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலத்தை இந்த மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 39,707 மேன்முறையீடுகளும் 3,183 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.
தொடரும் சோதனை நடவடிக்கை (UPDATE)
போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் முப்படைகள் இணைந்து நேற்றும் (21) பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர்…
கொல்லப்பட்ட நிலையில் யானைகளின் உடல்கள்
தம்புள்ளை, இனாமலுவ காப்புக் காட்டில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கொம்பன் யானை மற்றும் ஐந்து யானைகளின் உடல்கள் சிதறி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொம்பன் மற்றும் இரண்டு யானைகளின் உடல்கள் இருக்கும் இடங்களை அப்பகுதியைச்…
நடுவீதியில் கரணமடித்த வேன்
வேகமாக பயணித்துக்கொண்டிருந்த வேன், நடுவீதியில் கரணமடித்து விபத்துக்கு உள்ளான சம்பவம், செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய நோக்கிச் சென்ற வேன், எல்லா-வெல்லாவய வீதியின் 02வது மைல்கல்லுக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எல்லாவிலிருந்து வெல்லவாய நோக்கி வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, பெண்ணொருவர்…
போதைப்பொருள் கடத்திய 2 பெண்கள் கைது
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லால்ஜம்லுவாய் மற்றும் மிசோரமை சேர்ந்த லால்தாங்லியானி ஆகிய 2 பெண்கள் பெங்களூர் காட்டன்பேட்டை அருகே சோப்பு பெட்டிகளில் கோகைன் போதைப்பொருள் கடத்த முயற்சிப்பதாக பெங்களூர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலகத்துக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது.…
இலங்கையர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு
கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக்…