மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். மதுபானங்களை…
பல தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை!
சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி இன்று (14) மாலை இலங்கை வரவுள்ளதாக தடகள சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாள்…
செய்யாத குற்றத்திற்கு 109 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த மன்னிப்பு!
இந்நாட்டில் 109 வருடங்களுக்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணையின் பின்னர் கொல்லப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33(ஊ) உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…
மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இயங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட…
4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித்…
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அநுரவின் திட்டம்!
நாட்டையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் 8 மாதங்களில் வரி வருவாய் 28.5% அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி முதல் ஓகஸ்ட்…
வாக்களிப்பு நாளில் இவற்றுக்கு தடை!
இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர் அல்லது வேட்பாளர் தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர்…
நுவரெலியா மாவட்ட வாக்காளர்கள் தொடர்பான விபரம்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 532 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட…
மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடி வரும் பொலிஸார்
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாத பெண் ஒருவருடன் வாடகைக்காக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பாரிய அளவிலான…
