admin

  • Home
  • யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்

யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்

முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ – முதல் சர்வதேச மாநாட்டை நடத்தும் சவூதி

2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைக்கப்படுமே தவிர, விற்கப்பட மாட்டாது!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன் எயாலைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க…

புதிய நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக்…

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய்கள்!

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல்…

ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி!

LPL கிரிக்கெட் போட்டியில் இன்று (03) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா…

பெரிய உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி மரணம்!

சாப்பாட்டு தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை…

பானி பூரிக்கு தடை – புற்றுநோய்க்கு காரணமான செயற்கை நிறமிகள், இரசாயனங்கள் கலப்பு

இந்தியா, கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரியின் தரத்தினை பரிசோதித்தபோது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள்…

முரல் மீன் குத்தி, 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார். குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான…

இலங்கை ஆசிரியர்களை விரும்பும் மாலைதீவு

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மாலைதீவிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்…