admin

  • Home
  • நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் அநுர!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் அநுர!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுரகுமார திஸாநாயக்க…

அநுரவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின்…

ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிவிப்பு

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை…

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்!

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றை இந்த தேர்தல் மாற்றும்!

இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரையில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம்!

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்து. அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. இதன்படி, மாலை 4 மணி வரையில் மாவட்ட…

பென்சிலில் வாக்களித்தவரா நீங்கள்?

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை!சில வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை…

வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்ததாக…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துஹெர பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்டவிரோத மதுபானம் தொடர்பில்…

புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம்- 3 பேர் பணி இடைநீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…