கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது. கையொப்பமிட்டார் அநுர..இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின்…
தோல்விக்கு என்ன காரணம்?
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும் என்ற கருத்துக்கு சஜித் பிரேமதாச இன்று (24) பதிலளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வௌியிடுகையில், “இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு…
ரணிலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,336.69 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 239.88 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச்…
ரணில் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.
விக்ஷ்வ விலகல் – மாற்று வீரருக்கு அழைப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விக்ஷ்வ பெர்ணான்டோ விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக 27 வயதான வலது கை…
புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுக்கொள்கிறார். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…
ஜனாதிபதி தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி
15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
பிரதமர் இராஜினாமா!
பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று…
அனுரவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு நிபுனஆரச்சி?
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
