யாழில் துப்பாக்கிச்சூடு

ByEditor 2

May 20, 2025


யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற  கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார், பளை பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் உடன் சென்ற  கனரக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். எனினும், கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது. 

இதையடுத்து பொலிஸார் குறித்த  கனரக வாகனத்தை  தமது வாகனத்தில் துரத்திச் சென்றனர் எனினும், அந்த கனரக வாகனம், வேம்பிராய் நோக்கி மிக வேகமாக சென்றது. 

இதன் போது லொறியில் பயணித்தவர்கள்  பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைட் மூலம் ஒளியை பாய்ச்சியிருந்தனர். 

இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார்  கனரக வாகனத்தின்  டயர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதையடுத்து குறித்த  கனரக வாகனத்தை  நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டதாக   கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *