குளியாப்பிட்டியில் துப்பாக்கி சூடு
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில்…
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 3% வழங்க ஒப்புதல்
சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த தள்ளுபடியை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்
இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனையடுத்து, இலங்கை கடலோர காவற்படை கப்பலான சுரக்ஷாவில் நிறுவப்பட்ட முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட கொள்கலனை, இந்திய கப்பல் முறையாக…
வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் பொருளொன்று மிதந்து வந்துள்ளது. மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதிஇதிருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன்…
ஏற்றாமல் சென்றால் 1958 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும்
இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த…
சஞ்சீவ கொலை வழக்கு (UPDATE)
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை மார்ச் 7, 2025 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார். குற்றம் செய்வதற்கு சிம் அட்டைகளை வழங்கியதாகவும், கொலைக்கு தூண்டியதாகவும்,…
தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
ஹட்டன் – ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் இரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தீ…
வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக (03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டு தாக்குதலை 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.…
சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது
சட்டவிரோதமான முறையில் போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றி வந்த மூன்று சந்தேக நபர்களை இன்று (3) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி அனுமதி பத்திரம் ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9…
பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
25 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று பிள்ளைகளின் தாயான முப்பத்தாறு வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த பெண் மட்டக்குளிய பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரோஷனின் மனைவி…
