LOCAL

  • Home
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை

பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து…

இலங்கையில் அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குளோபோகன் (Globocan) 2022 தரவுகளின்படி, உலகளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின்…

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில்…

“ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவை”

தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு…

எம்.பி ரவிகரன்கோரிக்கை

வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை…

“சுகாதார பாதுகாப்பை அடிப்படை உரிமையாக சேர்க்கவும்”

குடியுமை மற்றும் அரசியல் உரிமைகளைப் போலவே, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளையும் அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார். குறித்த துப்பாக்கியை வைத்திருந்த மஹியங்கனை, 40 ஆம் இலக்க தொழில்துறை காலனியை சேர்ந்த…

“நள்ளிரவு நடமாட்டத்தை தவிருங்கள்…”

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். காரைதீவு மாவடிப்படியில் செவ்வாய்க்கிழமை (04) இரவு இரு வீட்டுக்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இது கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த…