முஸ்லிம் திருத்தச் சட்ட்டத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை – சாவித்ரி போல்ராஜ்
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. அதற்காக நாங்கள் துறைசார் குழுவொன்றை நியமிப்போம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர்…
பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் உறக்கம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததால், பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் பொலிஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டனர். வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் வெலிகந்த…
யாழ் – திருச்சி இடையே விமான சேவையை ஆரம்பம்
இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும்…
மண்டை ஓடுகளுடன் மனித எச்சங்கள் மீட்பு
குருநாகல் ஓவத்த வீதியில் உள்ள ஹிங்குல் பகுதியில் உள்ள ஹிங்குல் ஓயாவின் கரையில் (08) சில மனித உடல்களின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. பையொன்றில் இரண்டு மண்டை ஓடுகளும், மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார்…
தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்…
மற்றொரு சட்டவிரோத சொகுசு வண்டி
போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாகனம் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதிகாரிகள்…
இஸ்லாமியத் திருமணச் சட்டம் குறித்து விமர்சித்த அர்ச்சுனா எம்.பி
இஸ்லாமிய திருமணச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில்…
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்…
தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார்…
நாட்டில் சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை உட்பட முழு உலகமும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்புடைய…
