ரயிலில் செல்ஃபி எடுத்த ஆஸி பிரஜை படுகாயம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே…
பொரளை கொலை வழக்கு – (UPDATE)
2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, கே.எம்.…
யுவதி சடலமாக மீட்பு
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா….…
தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர்
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…
IOC எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கை IOC நிறுவனம், (மார்ச் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை திருத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை மாற்றத்தின் படி, 92 ஆக்டேன் பேட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய விலை ரூ. 299 ஆக…
பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக முதலாம் தவணையின் முதல் கட்ட விடுமுறை மார்ச் மாதம் 14…
நில அபகரிப்பு தடுத்து நிறுத்தம்
சட்டவிரோதமான நில அபகரிப்பு, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம் பெற்றது. குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் போது காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் மற்றும்…
கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் உயிரிழப்பு
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் மூவர் அலையில் சிக்கினர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றுமொரு பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கெப்ரக வாகனத்தில்…
நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவு
2025 மார்ச் மாதத்தில் நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 4.2 சதவீத பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இந்த நிலை சற்று முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. உணவில்லா பணச்சுருக்கம்…
