ஜனாதிபதி நிதியத்தில் மோசடி
ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. 2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி…
இலங்கை பத்திரிகை சபைக்கு தலைவராக ஆர். விஜேபண்டார
இலங்கை பத்திரிகை சபைக்கு ஒரு தலைவர் மற்றும் மூன்று நிர்வாக சபை உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் அதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஊடக அமைச்சில் நடைபெற்றது. விருது…
தம்பியை கொலைசெய்த அண்ணன்
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பிரதேசத்தில் நேற்று மாலை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு…
மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்
நேற்று (01) காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம்…
மியன்மாருக்கு இலங்கை உதவி
மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார். மியான்மரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடன்…
தேர்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வியாழக்கிழமை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம், புதன்கிழமை (02) உத்தரவிட்டது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை…
நீதிபதிக்கு ஒரு மாத சிறை
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்க அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி பாறுக் ஷாஹீப் என்பவருக்கு…
விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு
கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவன்-மனைவி உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த வங்கி புதிய நம்பிக்கை வழங்கியுள்ளது.…
அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது. இந்நிலையில் சிசுவின் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக…
