admin

  • Home
  • கேஸ் விலை குறைப்பு

கேஸ் விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மாற்றம் செய்யப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்…

நாய் கோப்பையில் பேத்திக்கு உணவு கொடுத்த பாட்டி

தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய்க்கு உணவு வைக்கும் கோப்பையில் தன்னுடைய பேத்திக்கு, உணவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பேத்தியின் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெயாங்கொட வதுரவ எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது. பெற்றோர் இன்மையால் சிறு…

கோவை அய்யூப், ஜனாஸா நல்லடக்கம்

கோவை அய்யூப் (மார்க்க அழைப்பாளர்) 02-06-2024. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அன்னாரின் ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் 03-06-2024. திங்கட்கிழமை இன்று -03- லுகர் தொழுகையின் பிறகு கோயமுத்தூர் ழூபூ மார்க்கெட் ழூலங்கர் கானா மையவாடியில் நடைபெற்றது அன்னாரின் தங்குமிடம் சிறப்பானதாக…

119 Call க்கு எடுத்து, பொய் கூறியவருக்கு நேர்ந்த கதி

பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த வருடம்…

ஹோட்டலில் சிக்கிக்கொண்ட சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம்

களுத்துறை- ஹொரண ஸ்வக்வத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பல்வேறு வயதுடைய சுமார் 85 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாவக் ஓயா நிரம்பி வழிவதால், ஹோட்டலில் சிக்கி எதிர்பாராத வெள்ள பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

அத்தனகலு ஓயாவை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலங்களுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, தாழ்நிலப்பகுதியினூடான சில…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.எனவே கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்…

அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான பிரதேசங்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன் அக்குரஸ்ஸவில் 283.5…

களனிவெளி ரயில் மார்க்கத்தின் பாலம் ஒன்று இடிந்தது

வகை மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வகை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் மற்றொரு நுழைவாயிலுக்கும் பூட்டு

அதிவேக நெடுஞ்சாலையின் வெளி சுற்றுவட்ட வீதியின் கடுவலை ஊடான பியகம நோக்கிய வீதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தவோ அல்லது கடவத்தையில் இருந்து வரும் வாகனங்களை கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தி வெளியேறவோ முடியாது என எமது…