மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை!
தமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை நாடு திரும்பிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
இறைச்சிக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது
கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானை பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், ரி…
வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்…
ஜனவரியில் ஏற்றுமதி வருமானம் 970 மில்லியன் அமெரிக்க டொலர்
2024 ஜனவரியில் ஏற்றுமதி மூலம் இலங்கையின் வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.77% சரிவைக் குறிக்கிறது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 2023 உடன் ஒப்பிடுகையில், விவசாய…
மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!
புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…
முடங்கியது பேஸ்புக்
நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாயத்தை நவீனமயமாக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற…
பெண்ணிடம் சில்மிஷம் செய்த அதிபர் கைது!
பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தொம்பகஹவெல பொலிஸார் சந்தேக நபரை நேற்று (03) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம்…
வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வைத்தியரின் மனைவியும்…
மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும்…
