அருள்மழையால் நனைந்த, ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தான்
மதீனா முனவ்வரா நகரில் தற்போது (29-04-2024) பலத்த மழை பெய்து வருகிறது. மஸ்ஜிதுன்னபவியின் அருகே உள்ள. ஜன்னத்துல் பகீவு கப்ருஸ்தான் முழுவதும் அல்லாஹ்வின் அருள் மழையால் மழை நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இங்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்…
மீண்டும் இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்துசேவை ஆரம்பம்
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் மே 13 ஆம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் திகதி துவங்கியது.…
நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை நாசமாக்கும் இலங்கையர்கள்
இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்காக நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் அகால மரணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.…
வீட்டிற்குள் விழுந்த மின்னல் – 2 பேர் உயிரிழப்பு
இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல்…
இவ்வளவுதான் வாழ்க்கை, இவ்வளவுதான் உலகம்..
அறிவியலின் படி, ஒரு உடல் புதைக்கப்பட்ட பிறகு, அதாவது 24 மணி நேரம் கழித்து, மனித குடலில் பூச்சிகளின் குழு செயல்படத் தொடங்குகிறது. அவை உடலின் வழியிலிருந்து வெளியேறத் தொடங்குகின்றன. மேலும் தாங்க முடியாத துர்நாற்றத்துடன், அது அவர்களின் சகாக்களை அழைக்கிறது.…
சவூதி – ஈரான் உறவில் பெரும் முன்னேற்றம்
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஈரானின் அனைத்து பொருளாதார திட்டங்களையும் சவுதி ஏற்றுக்கொண்டது. பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவதையும், அதை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதையும் வலியுறுத்தியது.
ட்ரோன்கள் பறக்க தடை! பொலிஸார் அறிவிப்பு!
அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத…
தாயே குழந்தையை கொலை செய்த கொடூரம்
மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது.நேற்று (28) காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், முறைப்பாட்டாளர் வசித்த வீட்டின் அருகில்…
சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு – எப்படித் தடுக்கலாம்..?
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய்…
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள்…
